நமது C&D ஊழியர்களுக்கு சோப், டவல், பேனா, வாட்டர் பாட்டில், டம்ளர், டைரி ஆகியவற்றை வழங்குவதற்கு பதிலாக வழங்கப்படவேண்டிய ரூ 500, வழக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில் சேர்த்து வழங்கப்படும். ஆனால் ஜனவரி 2016 சம்பளத்தில் அந்த ரூ.500 சேர்க்கப்படவில்லை.
உடனடியாக நிர்வாக கவனத்திற்கு நமது சங்கம் இந்த பிரச்சனையை கொண்டு சென்றது. தவறை உணர்ந்து, 02.02.2016 அன்று நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. பிப்ரவரி 2016 மாத சம்பளத்தில் ரூ. 500 வழங்கப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்