Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, February 5, 2016

வருமான வரிக்கணக்கு - 80/C வரி விலக்கு விவரங்கள்

 

அருமைத் தோழர்களே! 

நமது தோழர்களின் வருமான வரி சுமையை குறைக்கும் விதமாக, வருமான வரி 80/C சட்டப்படி, விலக்கு பெற தேவையான சேமிப்பு விவரங்களை ஊழியர்களுக்கு தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகத்தை கோரியிருந்தோம். 

நமது கோரிக்கையை ஏற்று, சேலம் மாவட்ட சம்பள பட்டுவாடா கணக்கு அதிகாரி அவர்கள் அந்த விவரங்களை பட்டியலிட்டுள்ளார். 

இந்த விவரப்படி, இது வரை இந்த நிதி ஆண்டில், நமது சேமிப்பு எவ்வளவு? இன்னும் எவ்வளவு சேமிப்பு செய்யலாம்? வீட்டு கடன், குழந்தைகள் கல்விச்செலவு உள்ளிட்ட விஷயங்களில் எவ்வளவு தொகையை சமர்ப்பிக்கலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். 

கிளை செயலர்கள் இதை உடனடியாக பதிவிறக்கம் செய்து தோழர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் வருமான வரிச்சுமையை குறைக்க உதவுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன். 

விவரங்கள் வழங்கிய மாவட்ட சம்பள பட்டுவாடா கணக்கு அதிகாரி அவர்களுக்கு நமது நன்றிகள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
விவரங்கள் காண இங்கே சொடுக்கவும் 
கணக்கு அதிகாரி கடிதம் காண இங்கே சொடுக்கவும்