Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, February 15, 2016

வெற்றியை உத்தரவாதப்படுத்திய விரிவடைந்த வேலூர் மாநில செயற்குழு



தமிழ் மாநில சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழு 13.02.2016 அன்று வேலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநில சங்க தலைவர் தோழர் S . செல்லப்பா, தலைமை தாங்கினார். 

30-04-2016 அன்று பணி ஓய்வு பெற உள்ள  மதுரை மாவட்ட செயலர் தோழர் S.சூரியன் தேசிய கொடியை ஏற்றி வைக்க, நமது சங்கக்  கொடியை, மாநில உதவித் தலைவர் தோழர்  வெங்கட்ராமன் ஏற்றி வைத்தார். மாநில உதவிச் செயலர்  ,தோழர் சுப்ரமணியன் அஞ்சலி உரை நிகழ்த்த,  மாநில செயலர் தோழர் A . பாபுராதா கிருஷ்ணன் வரவேற்பு உரையுடன், கூட்ட நோக்கங்களை விளக்கி உரை நிகழ்த்த,   விரிவடைந்த மாநில செயற்குழு தொடங்கியது.

தொடக்க உரை  நிகழ்த்திய நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் நடைபெற   உள்ள 7 வது சங்க சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU  சங்கம் 50 சதத்திற்கு மேல் மிக பெரிய வெற்றியை பெறும்  என அறிவித்த போது  கரவொலி அடங்க நீண்ட நேரமாகியது . 6 வது சரிபார்ப்பு தேர்தலில் போனஸ் , மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் LTC   ஆகியன நிறுத்தப்பட்ட விசயங்களை நமக்கு எதிரான பிரச்சாரங்களாக  மாற்றிய NFTE சங்கம் 4.68 % மேற்பட்ட வாக்குகளை இழந்தது . ஆனால்  நமது BSNL ஊழியர் சங்கம் 2.% வாக்குகளை அதிகரித்து சாதனை வெற்றி பெற்றது . 

தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் கையாண்டு தீர்வு செய்துள்ள பல்வேறு  பிரச்சனைகள்   மற்றும் நமது நிறுவன புத்தாக்கத்திற்கு செய்துள்ள  நிகழ்வுகள் நம்மை மிக பெரிய வெற்றியை நோக்கி செல்லும் என அறுதியிட்டு கூறினார் .

மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வாரியாக கிளை செயலர்கள் பேசினர். நமது மாவட்டத்தில் இருந்து தோழர் P .செல்வம், கிளை செயலர், கொண்டலாம்பட்டி, தோழர் S . ராமசாமி, நாமக்கல் நகர கிளை செயலர் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டனர். 

நமது மாவட்டத்தில் இருந்து கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள்  முன்னணி தோழர்கள் 28 பேர் கலந்து கொண்டனர். 
அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்த வேலூர் தோழர்களுக்கு நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்