Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, February 26, 2016

மத்திய சங்க இணைய தள செய்திகள்

 Image result for bsnleuchq


GM (Estt.) உடன் சந்திப்பு 

24.02.2016 அன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, திருமதி.மது அரோரா, GM (Estt.)., அவர்களை சந்தித்து ஊழியர் பிரச்சனைகள் சம்மந்தமாக, விவாதித்தார். நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கிழ்கண்ட பிரச்சனைகள் 04.03.2016 அன்று நடைபெறும் வாரிய கூட்டத்தில் (Board Meeting) தீர்வு காணப்படும் என GM (Estt.)., தகவல் தெரிவித்தார். அவை,

01) 01.01.2007 க்கு பின், பணியமர்த்தப்பட்ட RM / Sr .TOA ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பள இழப்பை ஈடுகட்ட, TTA தோழர்களுக்கு வழங்கியது போல், ஒரு கூடுதல் ஆண்டு உயர்வு தொகை (Additional Increment) 

02)  TTA / Sr .TOA / TM / RM கேடர்களுக்கு புதிய பெயர்கள் 

03) BSNL ல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு 3 சதவீத ஓய்வுதிய பங்களிப்பு 

04) ஊழியர்களுக்கும், அதிகாரிகள் சம்பள விகிதமான E1 சம்பள விகிதம் 

05) காசுவல் ஊழியர்களுக்கு பணிக்கொடை   

வங்கிக் கடன்

24.02.2016 அன்று நமது பொது செயலர், திரு.யஸ்வந்த் நாராயண் சிங், GM(T&BFCI)., அவர்களை சந்தித்து வங்கிக்கடன் ஒப்பந்தங்கள் சம்மந்தமாக விவாதித்தார்.  அப்பொழுது, Bank of Maharashtra, Syndicate Bank, HDFC Bank மற்றும் J&K Bank ஆகியவற்றுடன் ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், கனரா வங்கியுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் GM(T&BFCI)., தகவல் தெரிவித்தார். 

கடுமையான நிபந்தனைகள் போடுவதால், Union Bank of Indiaவுடன் ஒப்பந்தம் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூடுதலாக தெரிவித்தார். 

ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைத்து வருவதால், வங்கிக் கடன் வட்டி விகிதமும் குறைக்க பட வேண்டும் என நமது பொது செயலர் வலியுறுத்தி உள்ளார். பரிசீலிப்பதாக, GM(T&BFCI)., தகவல் தெரிவித்தார். 


GM (Pers.) உடன் சந்திப்பு 


24.02.2016 அன்று நமது பொது செயலர், திரு. D. சக்கரபர்த்தி, GM (Pers.) அவர்களை சந்தித்தார். JTO இலாக்கா போட்டி தேர்வு 2013 நடந்த போது, கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பென்கள் வழங்க கோரினோம்.  ஓரிரு நாளில் அதற்கான சாதக  உத்தரவு வெளியிடப்படும் என  GM (Pers.) தகவல் தெரிவித்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்