Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, February 3, 2016

ஆத்தூர் தோழர் ராஜமாணிக்கம் பணி நிறைவு பாராட்டு விழா




ஆத்தூர் கிளையின் மூத்த தோழர், BSNLEU நகர கிளை உதவி தலைவர், தோழர் V . ராஜமாணிக்கம், TM அவர்கள் 31.01.2016 அன்று பணி நிறைவு செய்வதை ஒட்டி, ஆத்தூர் பகுதி BSNL அதிகாரிகள்/ஊழியர்கள் சார்பாக பிரிவு உபசார விழா 30.01.2016 அன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது. 

மாலை 05.30 மணி அளவில் துவங்கிய விழாவிற்கு, ஆத்தூர் கோட்ட பொறியாளர் திரு. C . பாஸ்கரன், தலைமை தாங்கினார். ஆத்தூர் பகுதியின் மூத்த தோழர்கள் V . சின்னசாமி, (BSNLEU), C . விஜயன் (NFTEBSNL) முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக, BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கலந்து கொண்டு தோழரை வாழ்த்தி சிறப்புரை வழங்கினார். 

BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், LJCM உறுப்பினரும், TNTCWU மாவட்ட பொருளருமான தோழர் P . செல்வம், NFTEBSNL மாவட்ட உதவி தலைவர் தோழர் M . வீரப்பன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

உட்கோட்ட அதிகாரிகள் திருவாளர்கள் பூமாலை, ராஜேந்திரன், ராஜூ, அம்பிகாபதி, சௌந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

ஒய்வு பெற்ற தோழர்கள்/அதிகாரிகள், திருவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பழனி, சுந்தரம், அன்பழகன், BSNLEU கிளை சங்க நிர்வாகிகள், தோழர்கள் வரதராஜன், பெரியசாமி, குமாரசாமி, செல்வராஜூ, சங்கர், NFTEBSNL கிளை சங்க நிர்வாகிகள் தோழர்கள் முத்துசாமி, சுந்தரமூர்த்தி மற்றும் திரளான ஊழியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். 

முடிவில், BSNLEU ஊரக கிளை செயலர் தோழர் வேல்விஜய் நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார்.

தோழமையுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர்