கருணை அடிப்படையிலான பணி நியமனம் செய்யப்படும்போது, இது வரை, இலாக்கா விபத்துகளில் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு எந்த முன்னிரிமையும் வழங்கபடாத நிலை இருந்தது. அதாவது , அவர்களின் விண்ணப்பங்கள், மற்ற விண்ணப்பங்கள் போலவே பரிசீலிக்கப்பட்டது.
இலாக்கா பணியின் போது ஏற்படும் விபத்துக்கள், (மின் விபத்து, தொலைபேசி பழுது நீக்கும் போது ஏற்படும் விபத்து, கேபிள் பழுது நீக்கும் போது ஏற்படும் விபத்து, தீ விபத்து) தீவிரவாத தாக்குதல்கள் போன்றவற்றில் உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தற்போது, நமது கோரிக்கை ஏற்க்கப்பட்டு, தலைமைகயகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. இது நமது சங்கத்தின் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்