Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 31, 2016

தொழிலாளி, "கை ஏந்தும் பிச்சைக்காரன்" அல்ல!

Image result for bonus


நமது பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ,  PLI கமிட்டி உறுப்பினர். அவர் நேற்று 30-03-2016 அன்று அகமதாபாத்திற்கு தேர்தல் பிரச்சாரம் சென்றிருந்த போது, அவசரமாக, முன் அறிவிப்பின்றி, PLI கமிட்டி கூட்டம், மதியம் 3 மணிக்கு அதன் கன்வீனரால் கூட்டப்பட்டது. 

NFTE தலைவர் தோழர். இஸ்லாம் அகமது அதன் மற்றொரு உறுப்பினர். அவர் கூட்டத்தில் பங்கேற்றார். நிர்வாகம் ரூ.10 முதல் ரூ.99 வரைதான் போனஸ் தர முடியும் என்று கூறியுள்ளதாகவும் அதனை இஸ்லாம் அகமது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. 

NFTE CHQ இணையதளத்திலும் மிகக் குறைவான போனஸ் தர நிர்வாகம் முன் வந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவு மேனேஜ்மெண்ட் கமிட்டிக்கு செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதுதான் NFTEயின் செயல்பாடு. எங்கும் எதிலும் LOW-QUOTATION. நம் பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ இந்த முடிவை ஏற்க முடியாது என்றும், இதனை எதிர்த்து BSNLEU போராடும் என்றும் CMDயிடம் கடிதம் கொடுத்துள்ளார். 

எனவே, நியாயமான போனஸ் கேட்டு,  நாளை, 01-04-2016 அன்று நாடு முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த, நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்துள்ளது. 

மேலும் 07-04-2016 அன்று ஒரு நாள் தார்ணா போராட்டம் நடத்தவும் அறைகூவல் விடப்பட்டுள்ளது. 

அணிதிரள்வோம்! போராடுவோம்!!.   
NFTE-நிர்வாகத்தின் கூட்டு சதியை முறியடிப்போம்!!!
LOW-QUOTATION, "NFTEஐ" 10-05-2016 அன்று தோற்கடித்து, தொழிலாளிக்காக போராடும் BSNLEU வை வெற்றி பெறச் செய்வோம். 

சேலம் நகர கிளைகள் சார்பாக 01-04-16 அன்று மாலை 5 மணி அளவில் சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் ஆர்பாட்டம்  நடைபெறும். 

ஊரக கிளைகளில் ஆர்பாட்டம் நடத்தி தகவல்களை அனுப்பவும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்