பின்னர் ஆத்தூர் கிளைக்கு சென்றோம். விண்ணதிரும் கோஷங்களுகிடையே தோழர்கள் பிரச்சார குழுவை வரவேற்றனர். வாயிற் கூட்டம் முடித்து, அலுவலக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் மல்லியகரை, மங்களபுரம், நாமகிரிப்பேட்டைதோழர்களை சந்தித்துவிட்டு, ராசிபுரம் சென்றோம்.
அதனை தொடர்ந்து, செல்லப்பம்பட்டி, பரமத்தி வழியாக வேலூர் சென்று அடைந்தோம். வாயிற் கூட்டம், அலுவலக பிரச்சாரத்திற்கு பின் நாமக்கல் வந்து, அங்கும் வாயிற் கூட்டம், அலுவலக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, முதல் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
இரண்டாவது நாள் 22.04.2016, முதலில் சங்ககிரி அதனை தொடர்ந்து எடப்பாடி, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் முடித்து, இறுதியாக திருச்செங்கோடு கிளையில் பிரச்சாரம் நிறைவு பெற்றது. வாயிற் கூட்டம், அலுவலக பிரச்சாரம் அனைத்து இடங்களிலும் நடைப்பெற்றது.
மூன்றாவது நாள் 23.04.2016, காலையில், கொளத்தூரில் துவங்கி, மேட்டூர் டேம், மேட்டூர் RS, பொட்டநேரி, வனவாசி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம் வழியாக, ஓமலூரில் நிறைவு செய்தோம்.
மூன்று நாட்களும் மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள்
S. ஹரிஹரன், P. தங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலர், தோழர்
M . பன்னீர்செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் காளியப்பன், (MAIN),ராஜலிங்கம் (திருச்செங்கோடு நகரம்), ராஜன் (திருச்செங்கோடு ஊரகம்), உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல், கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார் (GM அலுவலகம்), செல்வம் (கொண்டலாம்பட்டி), சம்பத் (மெய்யனூர்OD), உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
அந்தந்த கிளைகளில் கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். 3 நாள் பிரச்சாரத்திலும், (சுமார் 730 கி.மீ) வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. வெற்றியை உத்தரவாத படுத்தும் விதமாக அமைந்தது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்