Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, April 8, 2016

வெற்றிக்கு வித்திட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு




சேலம் மாவட்ட சங்கத்தின், விரிவடைந்த மாவட்ட செயற்குழு 05.04.2016 அன்று சேலம் சுபிக்ஷா மஹாலில் சிறப்பாக நடைப்பெற்றது. சேலம் மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார். 

முதல் நிகழ்வாக, சங்க கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே தோழர் V . சின்னசாமி, மாவட்ட உதவி தலைவர் ஏற்றி வைத்தார். தோழர் N . பாலகுமார், கிளை செயலர் GM அலுவலக கிளை, அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் அனைவரையும் வரவேற்றார். 

பின்னர், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகபடுத்தி, மாவட்டத்தின் இன்றைய நிலை, வெற்றி வாய்ப்புகள், நமது உடனடி கடமைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார். 

நமது தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன், செயற்குழுவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டிய அவசியம், ஊழியர் பிரச்சனைகளில் நாம் எடுத்த நடவடிக்கைக்களை விளக்கி பேசினார். 

SNATTA சங்கத்தின், தமிழ் மாநில செயலர் தோழர் P . அழகு பாண்டி ராஜா, கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். நேரடி நியமன TTA தோழர்களுக்கு, BSNLEU செய்த நன்மைகளையும், NFTEBSNL செய்த துரோகங்களையும் பட்டியலிட்டார். குறிப்பாக, JTO LICE 2013 தேர்வு விவகாரத்தில் நமது சங்கம் எடுத்த முயற்சிகளை பாராட்டி, தற்போது JTO வாக தாம் பதவி உயர்வு பெற்றாலும், தாம் ஓய்வு பெறும் 2040 வரை BSNLEU சங்கத்தை மறக்க மாட்டேன் என உணர்ச்சி பொங்க பேசினார். 

பின்னர், நமது அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் 
S . செல்லப்பா, நிறுவன புத்தாக்க த்திற்காக நாம் செய்த முயற்சிகள், ஊழியர் கோரிக்கைகளில் நாம் செய்த சாதனைகள், தேர்தல் நிலவரம், நமது வெற்றி வாய்ப்புகள் என பல விஷயங்களை விளக்கி, சிறப்புரையாற்றினார். 

தமிழ் மாநில சங்க அமைப்பு செயலர் தோழர் M . பாபு, வாழ்த்துரை வழங்கினார். அகில இந்திய சங்கம் வெளியிட்ட, கையேட்டின் தமிழாக்கத்தை, அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் 
S . செல்லப்பா வெளியிட, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், பெற்று கொண்டார். 

சமீப காலத்தில் ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரவ படுத்தப்பட்டனர். 
350 க்கும் மேற்பட்ட தோழர்கள் மாவட்டம் முழுவதுளுமிருந்து கலந்து கொண்டனர். 

செயற்குழு உறுபினர்கள் விவாதத்திற்கு பின், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தொகுப்புரை வழங்கி, வெற்றி கணியை பறிக்க, நமது தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் விளக்கினார். 

மாலை சுமார் 5.30 மணி அளவில், நிறைவு பெற்ற இந்த கூட்டத்தை தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி நிறைவு செய்தார். 

தலைவர்களின் சிறப்பான உரை, தோழர்களின் ஆழமான விவாதம், பெறு வாரியான தோழர்களின் பங்கேற்பு, அமைதியான சூழல் என செயற்குழு சிறப்பாக இருந்தது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்