நித்தி ஆயோக் அமைப்பின் மோசமான பரிந்துரையான BSNL, MTNL நிறுவனங்களின் பங்குகளை "கேந்திர விற்பனை" என்ற பெயரில் விற்பது, என்ற ஆலோசனையை எதிர்த்து, 03-08-2016 அன்று BSNL, MTNL சங்கங்கள் சார்பாக அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நமது மாவட்டத்தில், 03.08.2016 அன்று நகர கிளைகளை உள்ளடக்கி, சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, மாலை 5 மணிக்கு ஆர்பாட்டம் நடைபெறும். ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், மேட்டூர் போன்ற பெரிய கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தபட வேண்டும்.
மாவட்ட சங்க நிர்வாகிகள், அணைத்து கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள், சேலத்தில் மாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய சங்கங்களின் இணைந்த போராட்ட பிரகடனத்தை காண இங்கே சொடுக்கவும்