Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, July 6, 2016

60:40 பங்களிப்பு - அநீதி களையப்பட்டுள்ளது - இணைந்த போராட்டத்தின் இமாலய வெற்றி!



மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, நாம் போராடி வந்த 78.2 சத IDA இணைப்பிற்கு, மத்திய அமைச்சரவை 05/07/2016 அன்று  ஒப்புதல் அளித்த, அதே கூட்டத்தில், மற்றுமொரு நல்ல முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அது, 01/10/2000க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய செலவை முழுமையாக,அரசே ஏற்கும் என்பதாகும். 

01/10/2000க்குப் பின் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியச்செலவும் அரசிற்கே முழுமையாக பாத்தியப்பட்டது என்றும், BSNL தனது பங்களிப்பை FR -116ன்படி செலுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம், நிதி அமைச்சகம், நமக்கு ஏற்படுத்திய 60:40 பங்களிப்பு என்ற அநீதி களையப்பட்டுள்ளது.

BSNL உருவாக்கத்தின்போது அரசு அளித்த உறுதிமொழியை தற்போதைய அரசு நிறைவேற்றும் நோக்கிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், மத்திய அமைச்சரவை இம்முடிவை எட்டியுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்த, தொடர், கூட்டு இயக்கத்தின் பலனாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இந்த ஆகப்பெரிய சாதனை, FORUM அமைப்பின், நீண்ட நெடிய போராட்டத்திற்கு, கிடைத்த வெற்றியாகும். BSNLEU இந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கியது என்பது மறுக்க, மறைக்க முடியாத உண்மை. 

நல் வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்