Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 19, 2016

ஓய்வூதியர்களுக்கான 78.2 பஞ்சப்படி இணைப்பு - DOT உத்திரவு



ஓய்வூதியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, 78.2 சத இணைப்பிற்கான உத்திரவு, நேற்று (18/07/2016)  DOTயால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, 10/06/2013க்கு முன்பாக ஓய்வு பெற்ற தோழர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 01/01/2007 முதல் திருத்தி அமைக்கப்படும். 10/06/2013 முதல் நிலுவை வழங்கப்படும்.

முழு ஓய்வூதியம் (INCLUDING COMMUTATION) மற்றும்  குடும்ப ஓய்வூதியத்துடன் 78.2 சத IDA  இணைப்பு சேர்க்கப்படும். அதில் 30 சதம் கூடுதல் ஓய்வூதியமாக சேர்க்கப்பட்டு, நிர்ணயம் செய்யப்படும்.

பணிக்கொடை, விடுப்புச்சம்பளம் மற்றும் தொகுப்பு ஓய்வூதியம் (COMMUTATION ) ஆகியவற்றில் மாற்றமில்லை.

BSNL நிர்வாக அலுவலகங்கள் உரிய கணக்கீடு செய்து DOTCELLக்கு அனுப்பிட வேண்டும்.

மேற்கண்ட ஓய்வூதியத் திருத்தம் 31/12/2016க்குள் முடிக்கப்பட வேண்டும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
DoT உத்தரவு காண இங்கே சொடுக்கவும்