Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, July 21, 2016

மத்திய செயற்குழு தீர்மானங்களும், முடிவுகளும்

Image result for bsnleu chq


2016 ஜூலை 18 முதல் 20 வரை புது டில்லியில் நடைபெற்ற நமது மத்திய செயற்குழுவில், நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பல முக்கிய போராட்ட முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.


தீர்மானங்கள்

01. 02.09.2016 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது.
02. 01.01.2017 முதல் சிறப்பான ஊதிய மாற்றம் ஊழியர்களுக்கு பெற்றுத்தருவது.
03. நீண்ட நாட்களாக தீர்வு காண படாமல் உள்ள ஊழியர் பிரச்சனைகளை, தீர்வு காண போராட்ட களம் காண்பது.
04. மத நல்லிணக்கம்
05. BSNL புத்தாக்கம்
06. ஓய்வூதியர்களுக்கும், 78.2 பஞ்சப்படி இணைப்பு பலன்கள் பெற்று கொடுத்ததை கொண்டாடுவது
07. 100 சதம் அரசு பென்ஷனை போராடி பெற்று தந்ததை ஊழியர்களிடத்தில் கொண்டு செல்வது.
08. மேற்குறிய இரண்டு விஷயங்களுக்காக, 27.07.2016 அன்று "வெற்றி நாள்" அனுசரிப்பது, சிறப்பு கூட்டங்கள் நடத்துவது.
08. மத்திய அரசின் நாசகர கொள்கையான, பங்கு விற்பனையை எதிர்ப்பது. இது சம்மந்தமான " நிதி ஆயோகின்" முன்மொழிவுகளை எதிர்ப்பது.


போராட்ட இயக்கங்கள்

தேங்கியுள்ள ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி, கீழ்கண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
01. 17.08.2016 அன்று சிகப்பு ரிப்பனுடன், கோரிக்கை அட்டை அனிந்து, "கோரிக்கை தினம்" அனுஷ்டிப்பது.
02. 08.09.2016 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, தார்னா
03. 20.09.2016 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம்
04. தீர்வு எட்டப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்