ஊழியர் பிரச்சனைகள் மீது BSNL இயக்குனர் குழுவின் எதிர்மறை அணுகுமுறையை எதிர்த்து, 05.07.2016 அன்று கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த, நமது மத்திய சங்கம் அறை கூவல் கொடுத்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக நமது மாவட்டத்தில் 05.07.2016 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலைய முகப்பில், கருப்பு பேட்ஜ் அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார். கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு, தலைமை உரைக்கு பின், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், கோரிக்கைகளை விளக்கி பேசினார். அவரை தொடர்ந்து, மாவட்ட பொருளர்
தோழர் C . செந்தில்குமார் விளக்கவுரை வழங்கினார்.
இறுதியாக, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன பேருரை வழங்கினார்.
மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், நன்றி கூறி முடித்து வைத்த இந்த போராட்டத்தில், மாவட்டம் முழுவதிலுமிருந்து மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னனி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்