மத்திய, மாநில, மாவட்ட FORUM முடிவுகள் அடிப்படையில், புன்னகையுடன் சேவை திட்டத்தை, பொது மக்களிடத்தில் கொண்டு செல்ல, BSNL சேவைகளை கூடுதலாக விளம்பர படுத்த, 10.08.2016 அன்று சேலத்தில், மாபெரும் பெரும் திரள் பேரணி நடைபெற்றது.
BSNL சேலம் மாவட்ட முதன்மை பொது மேலாளர் உயர்திரு. S . சபீஷ், ITS அவர்கள் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். PGM பேரணிக்கும், தலைமை ஏற்று, திரளான ஊழியர்கள், அதிகாரிகளோடு BSNL சேவைகளை விளம்பரப்படுத்தி, நடந்து வந்தார். அவரோடு திரு. முத்துசாமி, DGM (Fin), திரு. கிருஷ்ணமூர்த்தி, DGM (HR/Admn), திரு. தங்கவேல், DGM( Marktg), திருமதி. ராதா, DGM (Sales), திருமதி. ஆஷா, DGM(TR) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
FORUM சார்பாக, BSNLEU மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன், SNEA மாநில உதவி செயலர் தோழர் M .R .தியாகராஜன், AIBSNLEA அகில இந்திய நிர்வாகி, தோழர் M .C .ரவி, BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, SNEA மாவட்ட உதவி செயலர், தோழர் N .சந்திரசேகரன், AISNLEA மாநில நிர்வாகி, தோழர் K . கோவிந்தராஜன், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் M . சண்முக சுந்தரம், FORUM அமைப்பின் கன்வீனரும் BSNLEU சேலம் மாவட்ட செயலுருமான தோழர் E . கோபால் ஆகியோர் பேரணியில் முன்னிலை வகித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி, திருவள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோயில், கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே, உள்ள MAIN தொலைபேசி நிலையத்தில் நிறைவு பெற்றது. 400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளாக பங்கு பெற்றனர்.
பின்னர் மெயின் தொலைபேசி நிலையத்தில், நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், PGM SWAS உறுதி மொழி வாசிக்க, அனைவரும் வழி மொழிந்து, உறுதி மொழி ஏற்றனர். சிறப்பு கூட்டத்தில், PGM , உயர் அதிகாரிகள் FORUM தலைவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
FORUM அறைகூவலை ஏற்று, சக்தி மிக்க பேரணியில், கலந்து கொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், FORUM அமைப்பின் நெஞ்சு நிறை நன்றி.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்