அருமை தோழர்களே! 2016 ஜூலை 18 முதல் 20 வரை கூடிய நமது மத்திய செயற்குழு, தேங்கியுள்ள, ஊழியர் பிரச்சனைகளை தீர்வு காண மூன்று கட்ட போராட்ட முடிவினை எடுத்தது. 17.08.2016 அன்று சிவப்பு ரிப்பனுடன் கூடிய, கோரிக்கை அட்டை அணிந்து அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், 08.09.2016 அன்று மத்திய, மாநில, மாவட்ட மட்டங்களில் தர்ணா போராட்டமும், 20.09.2016 அன்று உண்ணாவிரத போராட்டமும் நடத்த நமது மத்திய சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி 17.08.2016 அன்று அனைத்து கிளைகளிலும், சிவப்பு ரிப்பன் கோரிக்கை அட்டையுடன் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கேட்டு கொள்கிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
கோரிக்கை விளக்க நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்
சிவப்பு ரிப்பன் கோரிக்கை அட்டை காண இங்கே சொடுக்கவும்