Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, August 19, 2016

வெண்கலம் வென்றார் சாக்ஷி

BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்



இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அதிகமான பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் 118 விளையாட்டு வீரர்களுடன் இந்திய ஒலிம்பிக் குழு ரியோ டி ஜெனிரோவிற்குச் சென்றது.பதக்கப்பட்டியலில் இந்தியா இடம் பிடிக்கும் என்று காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. துப்பாக்கி சுடுதல், வில் வித்தை, டென்னிஸ், ஹாக்கி என அனைத்து விளையாட்டுகளிலும் இந்திய வீரர்கள் தோல்வியைத் தழுவி வெளியேறினார்கள். சரி இனி அவ்வளவுதான் என்றுநினைத்திருந்த வேளையில் இதோ சாக்ஷி மாலிக் என்ற மங்கை இந்தி யாவிற்கு ஒரு ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். இவர் பதக்கம்வெல்வார் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை.

மகளிருக்கான 58 கிலோ ப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் கிர்ஸ்தான் வீராங்கனை அய்ஸ்லு டினிபெகோவாவை வென்று சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.சாக்ஷி மாலிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த யொகானா மார்ஸிலினை 5-4 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மால்டோவா வீராங்கனை மரியானா செர்திவெரோவை வீழ்த்திய சாக்ஷி, காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை வலேரியா கொபலோவாவிடம் 2-9 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினார்.

இருந்தபோதிலும் ரப்பிஜாஷ் முறைப்படி அடுத்த சுற்றில் (ரப்பிஜாஜ் என்பது ப்ரி ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கும் ஒரு வீரர் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலோ அல்லது காலிறுதி சுற்றிலோ தோற்றாலும் உடனே போட்டியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார். அவரை வென்ற வீரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் தோற்றவருக்கு வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த முறைக்குத்தான் ரப்பிஜாஜ் என்று பெயர்). வெளியேற மங்கோலியா வீராங்கனை ஒர்கோன் ப்ரவ்டோர்ஜை 12-3 என்ற புள்ளிகளில் வென்று வெண்கலப்பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார்.

பாராட்டு மழையில் சாக்ஷி மாலிக்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அரியானா வின் சாக்ஷி மாலிக் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலரும்சாக்ஷி மாலிக்கிற்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அரியானாவில் உள்ள அவரது சொந்தக் கிராமம் விழாக் கோலம் பூண்டுள்ளது. தேசத்திற்கும் சொந்த மாநிலமான அரியானாவிற்கும் பெருமை தேடித்தந்த சாக்ஷி மாலிக்கிற்கு 2.5 கோடிரூபாய் பரிசுத் தொகையை அந்த மாநிலஅரசு அறிவித்துள்ளது. அத்துடன் அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.