25.08.2016 அன்று ராசிபுரத்தில் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில், வருகிற 2016 டிசம்பர் 31 முதல் 2017 ஜனவரி 3 வரை நமது அகில இந்திய சங்கத்தின் 7வது மாநாடு சென்னையில் நடைபெற உள்ளதையும், அதற்கான செலவு, நமது மாவட்ட சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட கோட்டா, உள்ளிட்ட விஷயங்களை விளக்கியவுடன், தோழர்கள் ஒவ்வொருவராக எழுந்து நன்கொடை தர முன் வந்தனர்.
அவர்கள் உறுதி அளித்த தொகை ரூ. 1,56,000 என்பது மகிழ்ச்சி தர கூடிய விஷயம். நமது இயக்கத்தின் பாரம்பர்யத்தையும், தோழர்கள் நமது இயக்கம் மீது வைத்துள்ள கொள்கை பற்றையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.
நன்கொடை வழங்க உறுதி அளித்த அத்துனை நல்உள்ளங்களுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி. பட்டியல் தொடர வேண்டும் எனத் தோழமையோடு கேட்டு கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நன்கொடை பட்டியல் காண இங்கே சொடுக்கவும்