BSNL -MTNL நிறுவனங்களின் பங்குகளை "கேந்திர விற்பனை" என்ற பெயரில் விற்க, முடிவு செய்த மத்திய அரசின், நிறுவன விரோத முடிவை எதிர்த்து நாடு முழுவதும் 03.08.2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய FORUM அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக, நமது மாவட்ட FORUM சார்பில், 03.08.2016 அன்று மாலை சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கண்டன போர் நடைபெற்றது. போராட்டத்திற்கு, தோழர்கள் S . தமிழ்மணி (BSNLEU),
N . சந்திரசேகரன், (SNEA), K . கோவிந்தராஜன் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.
N . சந்திரசேகரன், (SNEA), K . கோவிந்தராஜன் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.
தோழர்கள் R . மதுசூதனன், மாநில நிர்வாகி, SNEA, M . சண்முக சுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA, E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU,
M .R .தியாகராஜன், மாவட்ட செயலர் SNEA ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள்.
M .R .தியாகராஜன், மாவட்ட செயலர் SNEA ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 150 தோழர்கள் போராட்டத்தில், பங்கு பெற்றனர். இறுதியாக, தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், BSNLEU நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
இதேபோல், ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், மெய்யனுர் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடை பெற்றது.
தோழமையுடன்,
E . கோபால்,