Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, September 30, 2016

சென்னை சொசைட்டி சிறப்பு பிரதிநிதித்துவ கூட்டம் 28-09-16

Image result



சென்னை கூட்டுறவு சங்கத்தின் RGB உறுப்பினர்கள் பங்கேற்ற, சிறப்பு பிரதிநிதித்துவ  கூட்டம் 28-09-2016 அன்று சென்னையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன

1. சாதாரணக் கடன் ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு.

2. விழாக்கால கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்வு.

3. கல்விக் கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.

4. கணினிக் கடன் ரூபாய் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.

5. குடும்ப சேமநல நிதி (FWS) ரூபாய். 1200/- லிருந்து ரூபாய். 1400/- ஆக பிடித்தம் .

6. காப்பீட்டு தொகை ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு 

7. RGB உறுப்பினர்களின் பயணக் கட்டணம்: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு, 2 வகுப்பு படுக்கை வசதியிலிருந்து, 3 வகுப்பு குளிர்சாதன வசதிக் கட்டணம் வழங்கப்படும்.

8. கூட்டுறவு சங்கத்தில் 30 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு 20-05-2014 முதல் ரூபாய். 10,000/- வழங்கப்படும்.

உயர்த்தப்பட்ட கடன்கள் அனைத்தும் மத்திய கூட்டுறவுப் பதிவாளர் அனுமதி பெற்று   (90 நாட்கள் கால அவகாசம்) 01-01-2017 முதல் அமுல் படுத்தப்படும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்

குறிப்பு : இக் கூட்டத்தில் ஆய்படு பொருளில் இல்லாத வீடு என்ற பொருள் தொடர்பாக தன்னிச்சயாக தலைவர் எடுத்த முயற்சியை கூட்டம் கண்டனக்குரலை எழுப்பி நிராகரித்தது.