நமது மாவட்ட சங்கத்தின் 8வது மாவட்ட மாநாடு, வருகிற 2016 நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில், நடத்த கிளை செயலர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. திருச்செங்கோடு கிளைகள் மாநாடு நடத்த முன்வந்தது.
அதன்படி, இன்று, 28.09.2016 திருச்செங்கோட்டில், வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர்கள் தோழர்கள் நாராயணன் (நகரம்), ரங்கசாமி (ஊரகம்) தலைமை தாங்கினர்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, இருவரும் மாநாட்டின் நோக்கம், மாநாட்டு பணிகள், நிதி தேவைகள், ஏற்பாடுகள், தலைவர்கள் வருகை, ஊழியர்கள் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினர்.
மாநாட்டை மல்லசமுத்திரத்தில் நடத்த கிளைகள் முன்மொழிவு கொடுத்ததன் அடிப்படையில் ஏற்கப்பட்டது.
பின்னர், எட்டாவது மாநாட்டின் செயல் தலைவராக தோழர் K . ராஜன், ( கிளை செயலர், திருச்செங்கோடு ஊரகம்), பொது செயலராக தோழர் K . ராஜலிங்கம் ( கிளை செயலர், திருச்செங்கோடு நகரம்), பொருளராக தோழர் P . தங்கராஜு, மாவட்ட உதவி செயலர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல துணை குழுக்கள் அமைக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் வேளூர் சண்முகம், தங்கராஜு, எடப்பாடி சண்முகம், ரமேஷ், கிளை செயலர்கள் செல்வம் (கொண்டலாம்பட்டி), பரந்தாமன் (பள்ளிபாளையம்) நாராயணன் (எடப்பாடி) பாலசுப்ரமணியம் (நாமக்கல் நகரம்) சின்னசாமி (நாமக்கல் ஊரகம்), உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்