DoT துறையாக இருந்த நம்மை, அற்ப தொகை ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து, BSNL ஆக மாற்றிய போது, ஓய்வூதியம் முழுவதும் அரசாங்க கஜானாவிலிருந்து முழுமையாக வழங்கப்படும் என்பது நமக்கு கொடுக்கபட்ட உத்தரவாதம்.
ஆனால் அரசு தன் கடமையை மறந்து BSNLலில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியச்செலவில், அரசிற்கு BSNLலில் இருந்து கிடைக்கும் வருவாயில், 60 சதம் மட்டுமே ஈடு செய்ய முடியும் என தன்னிச்சையாக உத்திரவிட்டது.
இதனை நாம் கடுமையாக எதிர்த்தோம். பத்தாண்டு போராட்டத்திற்கு பின், 20.07.2016 அன்று நமது கோரிக்கை மத்திய அரசால் ஏற்கப் பட்டு, DoT யால் உத்தரவாக்கப்பட்டது.
தற்போது DOTயின் 20.07.2016 தேதி உத்தரவை, BSNL வழிமொழிந்து 14.09.2016 அன்று மாநில நிர்வாகங்களுக்கு, வழிகாட்டுதல் அனுப்பியுள்ளது.
BSNL ன் 14.09.2016 உத்திரவில் 3 முக்கியப் பிரச்சினைகள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.
* 01/10/2000க்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஒட்டு மொத்த ஓய்வூதியச்செலவும் அரசையேச் சார்ந்தது. BSNLக்கு எந்தவித செலவினமும் இல்லை.
* 01/10/2000க்குப் பின்பு ஓய்வு பெற்ற, மரணமுற்ற ஊழியர்களின் ஓய்வூதியச்செலவில் அரசிற்கு BSNL மூலம் கிடைக்கும் வருவாயில் 60 சதம் மட்டுமே ஈடு செய்யப்படும் என்ற அரசின் 15.06.2006 உத்திரவு ரத்து செய்யப்படுகிறது.
* BSNL நிறுவனம் தனது ஓய்வூதியப் பங்களிப்பை FR 116 விதியின் கீழ் வழக்கம் போல் செலுத்தும்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரமான நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்