02.09.2016 நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக நமது மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தோழர் M . பன்னீர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன சிறப்புரை வழங்கினார். அதிகாரிகள் சங்கம் சார்பாக ஆதரவு தெரிவித்து புதியதாக பொறுப்பேற்ற SNEA மாவட்ட செயலர் தோழர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் தோழர் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . அதே போல், ஓய்வு பெற்ற தோழர்கள் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். ஒப்பந்த ஊழியர்கள் சார்பாக, TNTCWU மாநில உதவி தலைவர் தோழர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார்.
தோழர்கள் செல்வம், குமரேசன் ஆர்பாட்ட கோஷங்களை எழுப்பினர். 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை, தோழர் N . பாலகுமார், GM அலுவலக கிளை செயலர் நன்றி கூறி முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
படங்கள் அனுப்பிய சேலம் MAIN, ராசிபுரம், பரமத்தி வேலூர்,திருச்செங்கோடு, ஆத்தூர் கிளைகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சேலம் MAIN
ராசிபுரம்
பரமத்தி வேளூர்
திருச்செங்கோடு
ஆத்தூர்