BSNLCCWF அகில இந்திய சங்கம் வருகிற 27.09.2016 அன்று நாடு முழுவதும், மாநில, மாவட்ட தலைநகரங்களில் ஒப்பந்த ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்த, அறைகூவல் கொடுத்துள்ளது.
அதன்படி, சேலம் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கம் சார்பாக சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, 27.09.2016 அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் இரு சங்க மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் முழுமையாக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
மாவட்ட செயலர் மாவட்ட செயலர்
BSNLEU TNTCWU
கோரிக்கைகள்:
1. விடுபட்ட காசுவல் ஊழியர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரப் படுத்து. !2. சம வேலைக்கு சம சம்பளம் உறுதிப்படுத்து !
3. உடனடியாக குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 18 000 வழங்கிடு !
4. ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாதே !
5. வேலை நீக்கம் செய்யப்பட்டதொழிலாளர்களுக்கு மறுபடியும் வேலை கொடு !
6. பகுதி நேர ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்றிடு.!
7. அனைவருக்கும் கிராஜுட்டி, போனஸ் உறுதி செய்திடு !
8. HRA, CCA, TA , போன்ற அலவன்சுகளை வழங்கிடு !
9. EPF, ESI, Pension சட்ட விதிகளை உறுதி செய்திடு !
10. விடுப்பு, வாராந்திர ஓய்வு, விடுமுறை ஆகியவற்றை அமுல்படுத்து !