Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, September 28, 2016

அலைகடலென திரண்டு, ஆர்ப்பரித்து ஆர்ப்பாட்டம்



BSNLCCWF மத்திய சங்கத்தின் அறைகூவல்படி, சேலம் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் சார்பாக 27.09.2016 அன்று சேலத்தில், ஒப்பந்த ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு, TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், தலைமை தாங்கினார். TNTCWU மாநில சங்க நிர்வாகி தோழர் செல்வம், ஆர்ப்பாட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து உரையாற்றினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், கோரிக்கைகளை விளக்கி பேசினார். 

BSNLEU மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் M . சண்முகம், 
S . ஹரிஹரன், BSNLEU மாவட்ட பொருளர் தோழர் C . செந்தில்குமார் கண்டன விளக்க உரை வழங்கினார்கள். 

இறுதியாக, BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் சிறப்புரை வழங்கினார். 

TNTCWU மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 150 ஒப்பந்த தொழிலாளர்கள் [25 பெண்கள் உட்பட] ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்