Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, September 2, 2016

வேலை நிறுத்தம் வெற்றி! அனைவருக்கும் நன்றி!!

Image result



மத்திய அரசின் நாசகர பொருளாதார கொள்கைகளை எதிர்த்து, நாடு முழுவதும் இன்று, 02.09.2016 நடை பெற்ற வேலை நிறுத்தத்தில், 20 கோடி பேர் கலந்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. நாடு முழுவதும் BSNL ஊழியர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொண்டுள்ளனர். நமது மாவட்டத்தில், 582 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். 582 தேச பக்த வீரர்களுக்கும் நமது செவ்வணக்கம். 

212 ஊழியர்கள் விடுப்பெடுத்துள்ளார். 242 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.  மாவட்டம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்கள் 100 சதம் வேலை நிறுத்தத்தில், கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு சேலம் மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள். 

தார்மீக ஆதரவு அளித்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுக்கும், ஓய்வு பெற்ற தோழர்கள் மற்றும்  ஓய்வு பெற்றறோர் நல சங்கத்திற்கும் நமது நன்றிகள். வேலை நிறுத்தம் வெற்றி பெற வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி.

நன்றி  கலந்த வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்