Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, September 12, 2016

தணிக்கை செய்யப்பட்ட BSNL வரவு செலவு கணக்கு

Image result


நமது நிறுவனத்தின் 2015 - 2016 ஆம் ஆண்டிற்காண, தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையினை BSNL குழு 09-09-2016 அன்று ஒப்புதல் ஏற்றுக்கொண்டுள்ளது. 

அதன்படி, 

2009 - 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக வருவாயை இந்த நிதியாண்டில் ஈட்டியுள்ளோம்.இந்த ஆண்டு மொத்த வருவாய் 32,918 கோடி ரூபாய்கள். கடந்த ஆண்டு நமது நிறுவனத்தின் வருமானம் ரூபாய். 28,648/- கோடி ரூபாய்கள். இந்த ஆண்டு ரூபாய். 4270/- கோடி கூடுதலாக வருமானம் ஈட்டியுள்ளோம்.

செயல்பாட்டின் மூலமாக 4.43% சதவீதம் வருமானம் உயர்ந்துள்ளது. 2014 - 2015 ஆம் ஆண்டு செயல்பாட்டு வருமானம் ரூபாய். 27,242/- கோடி, 2015 - 2016 ஆம் ஆண்டு செயல்பாட்டு வருமானம் ரூபாய். 28,449/- கோடி. சென்ற ஆண்டை விட ரூபாய். 1207/- கோடி கூடுதலாக செயல்பாட்டு வருமானம் பெற்றுள்ளோம்.

நிறுவனத்தின் நிகர நட்டம் 2014 - 2015 ஆம் ஆண்டை விட 53% சதவீதம் குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு நட்டம் ரூபாய். 8234/- கோடியிலிருந்து இந்த ஆண்டு நட்டம் ரூபாய். 3880/- கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

செயல்பாட்டு லாபம் 2014 - 2015 ஆம் ஆண்டு ரூபாய். 672/- கோடியிலிருந்து இந்த ஆண்டு (2015 - 2016) ரூபாய். 3854/- கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ரூபாய். 3182/- கோடி கூடுதலாக செயல்பாட்டு லாபம் பெற்றுள்ளோம்.

பெரும்பாலான கடன்கள் கட்டப்பட்டு விட்டது. 2500/- கோடி ரூபாய் மட்டுமே கடனாக உள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர்