Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, September 4, 2016

ஒரு ரூபாய்க்கு ஒரு GB! BSNL ன் புதிய அதிரடி திட்டம்!!


புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையாக, "ஒரு ரூபாய்க்கு ஒரு GB" என்ற புதிய திட்டத்தை நமது நிறுவனம் பிராட் பேண்ட் சேவையில் வழங்கவுள்ளது. 

09.09.2016 முதல் "Experience Unlimited BB 249" என்ற புதிய திட்டப்படி வாடிக்கையாளர்கள் ரூ.249.00 மாத கட்டணம் செலுத்தி, 300 GB டேட்டா பதிவிறக்கம் செய்யலாம். 2 Mbps வேகம் உத்தரவாதப்படுத்தப்படும் என நமது CMD தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில், பிராட் பேண்ட் சேவையில், இவ்வளவு குறைந்த விலையில் யாரும் சேவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் GIO நிறுவனம் செய்யும் போலி விளம்பரங்களை சமாளிக்க இந்த புதிய திட்டம் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். தோழர்கள் இந்த புதிய திட்டத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி, புதிய இணைப்புகளை பெற முயற்சிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்                                                        
CMD செய்தி குறிப்பு காண இங்கே சொடுக்கவும்
JIO - BSNL கட்டணம் ஒப்பீடு காண இங்கே சொடுக்கவும்