GM அலுவலக கிளையின் 8வது மாநாடு 24.09.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தோழர்
M .S. ராஜேந்திரன், தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்வாக சங்க கொடியை தோழர் P. செல்வராஜ், JE ஏற்றி வைத்தார். அஞ்சலி நிகழ்வுக்கு பின், கிளை செயலர்
தோழர் N . பாலகுமார் வரவேற்புரை வழங்கினார்.
தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் பன்னீர்செல்வம், ஹரிஹரன் வாழ்த்துரை வழங்க, மாவட்ட செயலர் தோழர்
E . கோபால், மாநாட்டு சிறப்புரை வழங்கினார்.
ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்கப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு ஏகமனதாக நடைபெற்றது. தோழர்கள் P . சண்முகம், OS , N .பாலகுமார், SOA, N . விஜயகுமார் SOA முறையை தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை செயலர்கள் தோழர்கள் செல்வம்(கொண்டலாம்பட்டி), காளியப்பன்(சேலம் MAIN), முன்னாள் மாவட்ட தலைவர்,
தோழர் பழனி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் M .S . ராஜேந்திரன், இந்த மாதம் இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, கௌரவிக்கப்பட்டார். தோழரின் இயக்க பணிகளை தலைவர்கள் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தனர்.
சுவையான உணவு வழங்கியது, அனைத்து உறுப்பினர்களுக்கும் துண்டு அணிவித்து கௌரவப்படுத்தியது, என நல்ல ஏற்பாட்டை செய்த கிளை சங்கத்திற்கு பாராட்டுக்கள்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்