சென்னை CGM அலுவலகத்தில், நீக்கப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கு, பணி கோரி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட, நமது தமிழ் மாநில சங்கம் அரை கூவல் கொடுத்திருந்தது. அதன்படி, 07-10-2016 மாலை சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட உதவி செயலர் தோழர் M. சண்முகம், தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர். E . கோபால், தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. தமிழ்மணி ஆகியோர் கண்டன பேரூரை வழங்கினர். BSNLEU சேலம் மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் S . ஹரிஹரன், P . தங்கராஜ், கண்டன உரை வழங்கினர். TNTCWU மாவட்ட பொருளர், தோழர் P . செல்வம் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
பரமத்தி வேலூர், மேட்டூர் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்