பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றம் ஒரு ஊழியர் அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை காசாக்கிக் கொள்ளலாம் என்று இருந்தாலும், ஒரு ஊழியர் எடுக்காமல் வைத்திருக்கும் விடுப்பை 300 நாட்களுக்கு குறைக்கக் கூடாது என ஒரு சிறப்பான தீர்ப்பை சொல்லி உள்ளது.
” ஒரு ஊழியர் அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை மட்டுமே காசாக்கிக் கொள்ளலாம் என இருந்தாலும், அதிகபட்ச வரம்பாக அவர் பயன்படுத்தாத விடுப்பை 300 நாட்கள் மட்டுமே என குறைக்கக் கூடாது என்பது அதன் பொருள் அல்ல. ஒரு ஊழியர் ஓய்வு பெறும் வரை அவரது விடுப்பு சேர்த்துக் கொள்ளலாம்; மனுதாரர் சட்டத்தில் உள்ளது போல அதிகபட்சமாக 300 நாட்கள் விடுப்பை காசாக்கிக் கொள்ளலாம்” என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பு மேல் முறையீடு செய்யப்படுமா? அரசாங்கம் என்ன முடிவு எடுக்கும் போன்ற விஷயங்களை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதன்பின் தான் உண்மையான பலன்கள் ஊழியர்களை வந்து சேரும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தீர்ப்பு நகல் காண இங்கே சொடுக்கவும்