05.10.2016 அன்று பரமத்தி வேலூர் கிளை மாநாடு வேலூரில் சிறப்பாக நடைபெற்றது. கிளை உதவி தலைவர் தோழர் R .குழந்தைசாமி, தலைமை தாங்கினார். கிளை உதவி செயலர் தோழர் M . சண்முகம், வரவேற்புரை வழங்கினார்.
மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார்.
மாவட்ட உதவி செயலர் தோழர் P . தங்கராஜ், மூத்த தோழர்
K .M . செல்வராஜ், திருச்செங்கோடு நகர கிளை செயலர் தோழர்
M . ராஜலிங்கம், திருச்செங்கோடு ஊரக கிளை செயலர் தோழர்
K . ராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநாட்டு சிறப்புரை வழங்கினார்.
ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஏகமனதாக ஏற்கப்பட்டது. இறுதியாக நிர்வாகிகள் தேர்வு ஏகமனதாக நடைபெற்றது. அதன்படி, கிளை தலைவராக தோழர் R . குழந்தைசாமி, JE, கிளை செயலராக தோழர் R . ரமேஷ், JE, கிளை பொருளராக, தோழர் D . மேகநாதன் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய கிளை செயலர் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்