நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணிபுரியும், ஒப்பந்த ஊழியர்களுக்கு,போனஸ் விதிப்படி, (8.33 என்ற அடிப்படையில்) ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ரூ. 7000/- போனஸ் வழங்க வலியுறுத்தி, கடந்த ஒரு மாத காலமாக நாம் பல முயற்சிகளை, முன் ஏற்பாடாக செய்தோம்.
நிர்வாகத்துடன், பல கட்ட பேச்சு வார்த்தை, ஒப்பந்ததாரருடன் பேச்சு வார்த்தை என தொடர்ந்தது. இருப்பினும், நமது கோரிக்கையையும், நிர்வாகத்தின் வழி காட்டுதலையும் புறம் தள்ளி, ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைவான போனஸை, ஒப்பந்ததாரர், நேற்று, 26.10.2016 பட்டுவாடா செய்தார்.
உடனடியாக, நாம் தலையிட்டு, நிர்வாகத்திடம் மேல் முறையீடு செய்ய ஒப்பந்த ஊழியர்களை பொது மேலாளர் அலுவலகத்திற்கு இன்று 27.10.2016 காலை வர சொல்லியிருந்தோம். ஊழியர்களும் அலைகடலென திரண்டு வந்தனர்.
முதலில், திட்ட பகுதி அலுவலகத்திற்கு சென்று, உதவி பொது மேலாளர் அவர்களை சந்தித்து நமது நிலையை விளக்கினோம். நிர்வாகமும் நம்முடன் இருப்பதாக கூறி, ஒப்பந்ததாரரை தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்தும், முயற்சி, வெற்றி பெறாததை வருத்தத்துடன் அவர் குறிப்பிட்டார்.
அங்கேயே கண்டன கோஷங்களை எழுப்பினோம். திரண்டிருந்த ஊழியர்களிடம் முதன்மை பொது மேலாளரிடம் முறையிடுவதற்காக, மகஜரில் கையொப்பம் பெற்றோம்.
பின்னர், முதன்மை பொது மேலாளர் உயர்த்திரு. S . சபீஸ் அவர்களை, திரளாக சென்று நேரில் சந்தித்து, மகஜர் அளித்தோம். அதை பெற்று கொண்டு, நம்முடைய கோரிக்கைகளை பொறுமையாக கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஊழியர்கள் கரஒலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். நமது முதன்மை பொது மேலாளர் ஊழியர்களை உடனடியாக, பணிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை வைத்தார். நாம் அதை ஏற்று, பணிக்கு திரும்ப உறுதி அளித்தோம். மகஜர் நகலை துணை பொது மேலாளர் (நிர்வாகம்) அவர்களிடமும் வழங்கினோம்.
BSNLEU, TNTCWU இரண்டு மாவட்ட சங்கங்களின் அறைகூவலை ஏற்று, உடனடியாக சேலத்தில் திரண்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நமது நன்றி மற்றும் பாராட்டுக்கள். இரண்டு நிகழ்விலும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர் , TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஹரிஹரன், தங்கராஜ், பன்னீர்செல்வம், வேலு, கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார் (GM அலுவலகம்), ராஜலிங்கம் (திருச்செங்கோடு நகரம்),வெங்கடேசன் (மெய்யனுர் OD), காளியப்பன் ( சேலம் MAIN), TNTCWU மாவட்ட சங்க நிர்வாகி தோழர் செல்வம், மாநில சங்க நிர்வாகி தோழர் செல்வம் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்