Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, October 23, 2016

சேலம் MAIN மற்றும் MAIN CSC இணைந்த கிளை மாநாடு


சேலம் MAIN மற்றும் MAIN CSC இணைந்த 8வது கிளை மாநாடு, நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், 19.10.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் M . கணேசன், M . விஜயன் கூட்டு தலைமை தாங்கினர். முதல் நிகழ்வாக, தோழர் பாலகிருஷ்ணன், JE சங்க கொடி ஏற்ற, தோழர் R . வரதப்பன், மெயின் கிளை உதவி செயலர் அஞ்சலியுறை வழங்கினார். தோழர் C . காளியப்பன், மெயின் கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார். 

தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜ், C . செந்தில்குமார், M . பன்னீர்செல்வம், 
R . வேலு, கிளை செயலர்கள் தோழர்கள் N . பாலகுமார், (GM அலுவலகம்), K . ராஜன், (திருச்செங்கோடு ஊரகம்), P . செல்வம் (கொண்டலாம்பட்டி) வெங்கடேசன் (மெய்யனுர் OD) இளங்கோவன் (உதவி செயலர், செவ்வை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநாட்டு சிறப்புரை வழங்கினார். ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், MAIN கிளைக்கு தோழர் 
M . கணேசன், C . காளியப்பன், P . சந்திரன், தலைவர், செயலர், பொருளாராகவும் CSC கிளைக்கு தோழர்கள் M . விஜயன், 
M . ரவிச்சந்திரன், R . ஸ்ரீனிவாசன், தலைவர், செயலர், பொருளாராகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தோழர் M . ரவிச்சந்திரன், CSC கிளை செயலர் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்