நமது மாவட்ட சங்கத்தின், 8வது மாவட்ட மாநாடு, மல்லசமுத்திரத்தில், 2016 நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் சிறப்பாக நடைபெற உள்ளது. 16.11.2016 அன்று செயற்குழு நடைபெறும். 17.11.2016 அன்று மாநாடு நடைபெறும்.
BSNLEU அகில இந்திய உதவி செயலர் தோழர் S . செல்லப்பா, தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, சேவை கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. சேவை கருத்தரங்கில், நமது முதன்மை பொது மேலாளர் திரு. S . சபீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்களுக்கு இரண்டு நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு. சார்பாளர்கள், கருத்தரங்கில் கலந்து கொள்வோருக்கு, 17.11.2016 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மாநாட்டு அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்
செயற்குழு அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு காண இங்கே சொடுக்கவும்