Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, November 1, 2016

தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தொழிற்சங்கங்கள் வரவேற்பு



இந்திய நாடு முழுவதும் உள்ள அரசுத் துறை நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான ஒப்பந்த, தற்காலிக, தினக்கூலித் தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கும் விதமாக தில்லி உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடித் தீர்ப்பினை வழங்கியுள்ளது.சமவேலைக்கு சம ஊதியம் என்பதே அத்தீர்ப்பின் சாராம்சம் ஆகும்.

முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பினை சிஐடியு, மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன.உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 26 அன்று, ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ஏ.எஸ். காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோர் கொண்ட பெஞ்ச், வழங்கிய தீர்ப்பில் அரசுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த, தினக்கூலி, தற்காலிக தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் பெற தகுதிபடைத்தவர்கள்; அவர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள். அந்த தீர்ப்பில் ஒரு துறையில் தற்காலிகமாகவோ, ஒப்பந்த முறையிலோ பணியாற்றும் ஊழியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் பெற தகுதிபடைத்தவர்கள்; இதை அனைத்துத் துறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்கள்.“ஒரு நிறுவனத்தில் ஒரே தன்மைவாய்ந்த பணியில் நிரந்தர தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தை, அதே பணியில் ஈடுபடும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அளிக்க மறுப்பதானது அடிமைத்தனமாக கருதப்படும்; அடிமைத்தனம் மட்டுமல்ல, ஊழியர்களை அடக்கி ஆளுதல், சிறுமைப்படுத்து தல் போன்றவைகளாகக் கருதப்படும்; தொழிலாளர் நலன் விரும்பும் மாநிலங்கள் சமவேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்துத்துறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நீதிபதி ஜே.எஸ். காதர் குறிப்பிடும் போது, “எந்த ஒரு தொழிலாளியும் ஒரே நிறுவனத்தில் ஒரே தன்மை வாய்ந்த பணியில் ஈடுபட்டு அதே பணியைச் செய்யும் ஒரு தொழிலாளர் பெறும் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தில் பணியாற்ற முன்வருவதில்லை; விரும்பவும் மாட்டார்கள். ஆனால் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற நிர்ப்பந்திக்கின்றன. ஒரு தொழிலாளி தன்னையும், தன்னைச்சார்ந்த குடும்பத்தார்க்கும் உணவு அளித்து உயிர் வாழ வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தனதுகௌரவம், சுயமரியாதையை இழந்தே குறைந்த கூலியைப் பெற்று பணியாற்று கின்றார்கள்” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒரே தன்மை வாய்ந்த பணியில் ஈடுபடு கின்றவர்களுக்கு மாறுபட்ட கூலியை வழங்குவது என்பது உழைப்புச் சுரண்டலும், தொழிலாளியை அடக்கி வைப்பதும், அடிமைப் படுத்தும் செயலும் ஆகும் என்றும், இது முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங் ங்களில் அரசுத்துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் அரசு நிறுவனத்தில் பணியாற் றும் நிரந்தர ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தை -அதாவது சமவேலைக்கு சமஊதி யம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கில், பஞ்சாப் உயர்நீதி மன்றம், ஒரே தன்மை வாய்ந்த பணியில் பணியாற்றுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற் காக சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டியதில்லை என்ற தீர்ப்பினை வழங்கியது.பஞ்சாப் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரத்துசெய்து மேற்கண்ட சிறப்புமிகுந்த தீர்ப்பினை அளித்தனர். “தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் அளித்திட வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. வேலை நிறுத்தம், போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கியக்காரணமே தாங்கள் கௌரவமுள்ளவர் களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத் தான்” என்று நீதிபதி கள் சுட்டிக் காட்டினர்.

மேலும் தங்களது தீர்ப்பில், “சமூக பொருளாதார கலாச்சாரம் சம்பந்தமாக 1966 ஆம்ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட கூட்டுஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்ப மிட்டுள்ள காரணத்தால் ஒப்பந்த விதிகளை மீறாமல் அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இவைகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி சமவேலைக்கு சம ஊதி யம் என்ற விதி, எல்லா தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒரே தன்மைவாய்ந்த பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்றும் தீர்ப்பில் கூறினர்.

“சமூக, பொருளாதார, கலாச்சார சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்பமிட்டு அது 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் முதல் அமலுக்கு வந்தநிலையில் அந்த விதியை அமல்படுத்துவ திலிருந்தே இந்தியா விலகி நிற்க முடியாது, அது மட்டுமல்லாமல் சட்ட விதிகளில் பல்வேறு விளக்கங்கள் இருந்தாலும், இந்திய அரசியல் அமைப்பு விதி 141 இல்சமவேலைக்கு சமஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமேயில்லை. ஊழியர் களில் நிரந்தர பணியாளரா, தற்காலிக பணியாளரா என்ற வேறுபாடுகிடையாது. ஊதியம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்” என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.

நவீன தாராளமயக் கொள்கை அமலாக் கம் என்ற பெயரால் நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் கூட தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்சிங் ஊழியர்களை நியமித்து உழை ப்புச் சுரண்டலை அரங்கேற்றும் இக்கால கட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்லாயிரக் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதை முழுமையாக அமல்படுத்த வேண்டிய கடமை தொழிலாளர்களின் விழிப்புணர்வோடும் தொழிற் சங்கத்தின் பணியோடும் இணைந்துள்ளது என்று சிஐடியு தலைவர்கள் கூறியுள்ளனர்.

Image result for theekkathir