BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் செவ்வணக்கம்
ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும், விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 33 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ.
சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது.
உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார். இதன் விளைவாக நடுநிலை நாடுகளின் நாயகராகப் போற்றப்பட்டார். கியூபாவின் அதிபராக ஆனபின்னும் எளிமையான மக்கள் தொண்டராகத்தான் அவர் திகழ்ந்தார். இவருடைய வழிகாட்டலில் இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் விழிப்புணர்வைப் பெற்றனர். அதன் விளைவாக இந்நாடுகளில் இருந்த பிற்போக்கு ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி ஜனநாயக அரசுகளை அமைத்துக்கொண்டனர்.
கியூபா நாட்டின் அதிபர் பதவியில் சுமார் 50 ஆண்டு காலம் இருந்த பிறகு தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்ததின் மூலம் அவருடைய புகழ் மேலும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
அன்புத் தலைவனுக்கு, புரட்சியாளனுக்கு சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் செவ்வணக்கம்
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்