MAIN தொலைபேசி நிலையம், சேலம்
BSNL நிறுவனத்திடமிருந்து 65000 செல் கோபுரங்களைப் பிரித்து தனி செல்கோபுர நிறுவனம் ஆரம்பிக்கத் துடிக்கும்
மத்திய அரசின் தவறான கொள்கையை எதிர்த்து, நிறுவனத்தை கூறு போட நினைக்கும் செயலைக் கண்டித்து,BSNL ல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து, 25/11/2016 - வெள்ளிக்கிழமை அன்று, நாடு தழுவிய பெருந்திரள் தர்ணா போராட்டம் நடத்த, மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்துள்ளன.
இந்திய நாடு முழுமைக்கும் முதற்கட்டமாக, கடந்த 27-10-16 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தற்போது இரண்டாம் கட்ட போராட்டம்.
அடுத்த கட்டமாக 15/12/2016 - வியாழன் அன்று நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும் நமது சங்கங்கள் அறைகூவல் கொடுத்துள்ளன.
எனவே, 25.11.2016 அன்று நமது மாவட்ட சங்கங்கள் சார்பாக, மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாலை நேர தர்ணா போராட்டம், சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு நடைபெறும்.
தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று, கோபுரங்களை காக்கும் போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E . கோபால்,
அமைப்பாளர்,
Forum of BSNL Unions and Associations மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU
மத்திய சங்கங்கள் போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்
மாநில சங்கங்கள் போராட்ட அறைகூவல் காண இங்கே சொடுக்கவும்