மத்திய சங்கங்களின் அறைகூவல்படி, 14.12.2016 அன்று சேலத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 ரோடு அருகில் துவங்கி, மெய்யனுர் தொலைபேசி நிலையம் வரை சென்று பின்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தோழர்கள் குமரேசன்(BSNLEU), சந்திரசேகரன்(SNEA), பன்னீர்செல்வம் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.
தோழர்கள் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU , V. சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், SNEA, M . சண்முக சுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA, சேகர், மாவட்ட பொருளர், SNEA ஆகியோர் கண்டன விளக்கவுரை வழங்கினார்கள்.
100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தை, தோழர் சேகர், மாவட்ட அமைப்பு செயலர், BSNLEU நன்றி கூறி முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்