நமது மத்திய சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாடு, எழுச்சியுடன், இன்று, (31.12.2016) துவங்கியது. முதல் நிகழ்வாக தேசிய கொடியை அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர்சிங் ஏற்றி வைக்க, நமது சங்க கொடியை பொது செயலர் தோழர் P. அபிமன்யூ, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றிவைத்தார்.
இந்திய தொழிற்சங்கங்களின் மூத்த தோழரும், நமது புறவலூருமான தோழர் V.A.N. நம்பூதிரி தியாகிகள் அஞ்சலி செலுத்தும் விதமாக தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலித்தியவுடன், அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
வரவேற்பு குழு சார்பாக, அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். வரவேற்பு குழு தலைவரும், மாநிலங்கவை உறுப்பினர் தோழர் T .K .ரங்கராஜன், அனைவரையும் வரவேற்று, சிறப்புரை வழங்கினார்.
தோழமை சங்கங்கள் சார்பாக NFTEBSNL பொது செயலர் தோழர் சந்தேஷ் வர் சிங் மாநாட்டில் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். NUBSNLWU(FNTO) தலைவர் தோழர் ஜெயபிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.
நம் அழைப்பை ஏற்று CMD, BSNL மாநாட்டிற்கு வருகை புரிந்தார். சேவை கருத்தரங்கம் துவங்கியது. பொது செயலரின் அறிமுக உரைக்கு பின், நமது CMD திரு. அனுபம் ஸ்ரீவத்சவா சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில், 01.01.2017 முதல் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றும் செய்வது உறுதி என பலத்த கரகோசங்களுக்கிடையே அறிவித்தார். 01.01.2017 முதல் BSNLல் அறிமுகப்படுத்தவுள்ள சலுகைகளையும் அறிவித்தார்.
SNEA தலைவர் தோழர் G.L.ஜோகி, AIBSLEA தலைவர் தோழர் சிவகுமார், BSNLMS பொது செயலர் தோழர் சுரேஷ் குமார், TEPU தலைவர் தோழர் செல்ல பாண்டியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். உணவு இடைவேளைக்காக மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர், துவங்கிய நிகழ்ச்சி நிரலில், CITU தலைவர் தோழர் A .K .பத்மநாபன் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்