BSNL நிறுவனத்தின் செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து, துணை நிறுவனம் துவங்க ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவையின், BSNL விரோதக் கொள்கை முடிவை எதிர்த்து, 15.12.2016, இன்று, மாவட்டம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.
அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூடப்பட்டன. பெரும்பாலான தொலைபேசி நிலையங்கள், அலுவலகங்கள், ஊழியர்கள் வராததால் திறக்க படவில்லை. ஒப்பந்த ஊழியர்கள் 100 சதம் வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றனர்.
வேலை நிறுத்த போராட்டத்திற்க்காக,
தயாரிப்பு பணியில் ஈடுபட்ட, அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தில், கலந்து கொண்ட அத்துனை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் FORUM சார்பாக நெஞ்சு நிறை நன்றி.
உளமார்ந்த நன்றியுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU