உடல் நலம் சரியில்லாமல், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் முதல்வர் டாக்டர் J.ஜெயலலிதா அவர்கள் நேற்று (05.12.2016) காலமானார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர், திரு MGR மூலமாக அரசியலுக்கு வந்தவர். நாடாளுமன்ற உறுப்பினர், அ.இ.அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தவர். MGR அவர்களின் மறைவிற்கு பின் அந்தக் கட்சிக்கு தலைமை தாங்கி செயல்பட்டவர். தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பொறுப்பு வகித்துள்ளார்.
அவரது மறைவிற்கு சேலம் மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் சேலம் மாவட்ட சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்