மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக CITU, மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்,
வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, விவசாயிகள், விவசாய தொழிலாளர், மாதர், வாலிபர், மாணவர், வழக்கறிஞர், மாற்று திறனாளி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை போராட்டத்தில் ஈடுபட, மாநில அளவில் அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சேலத்திலும், நாமக்கலிலும், 31.01.2017 அன்று "மனித சங்கிலி இயக்க" போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. பண தட்டுப்பாடு எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் ஒரு அங்கமாகிய நாமும், போராட்டத்தில் கலந்து கொண்டோம்.
சேலத்தில் மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், மாவட்ட செயலர் தோழர் E . கோபால் உள்ளிட்ட தோழர்களும், நாமக்கல்லில் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி உள்ளிட்ட தோழர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம்
நாமக்கல்