நமது சங்கத்தின் முன்னணி தோழரும், முன்னாள் மாவட்ட அமைப்பு செயலுருமான தோழர் R . வேலு, 28.02.2017 அன்று இலாக்கா பணி நிறைவு செய்ததால், மெய்யனுரில் 28.02.2017 அன்று சிறப்பான பணி நிறைவு பாராட்டு விழா மெய்யனுர் பகுதி ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மெய்யனுர் கோட்ட பொறியாளர் திரு. பாஸ்கரன் தலைமையில் விழா நடைபெற்றது. மாவட்ட சங்கம் சார்பாக, மாவட்ட செயலர் உள்ளிட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்