நிறுனத்தை காக்க, 09.03.2017 அன்று நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்/மாநில ஆளுநர் ஆகியோரை நேரில் சந்தித்து, அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடத்த, மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தன. 09.03.2017 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் பல்வேறு அரசு பணிகளில் இருந்ததால், 10.03.2017, இன்று காலை நம்மை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார்.
அதன்படி, BSNLEU, SNEA, AIBSNLEA சங்க நிர்வாகிகள் காலையில், சேலம் MAIN தொலைபேசி நிலையத்திலிருந்து, பேரணியாக சென்று மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்தோம். சுமார் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், கோரிக்கை மனு கொடுத்தபின், ஆட்சியர் அலுவலக வாயிலில், கூட்டம் நடத்தினோம்.
BSNLEU சார்பாக, மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், SNEA சங்கம் சார்பாக மாநில நிர்வாகி தோழர் K .G. நாராயணகுமார்,
மாவட்ட செயலர் தோழர் V . சண்முக சுந்தரம், மாவட்ட பொருளர் தோழர் சேகர், AIBSNLEA சார்பாக மாவட்ட செயலர் தோழர் M .சண்முக சுந்தரம் ஆகியோர் விளக்க உரை வழங்கினர்.
நிகழ்வில், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . விஜயன், P. குமாரசாமி, M . சண்முகம், P . தங்கராஜ், S . ராமசாமி, M . பன்னீர்செல்வம், P . புகழேந்தி, R . ஸ்ரீனிவாசன், கிளை செயலர்கள் தோழர்கள் K . ராஜன், N . பாலகுமார், C . காளியப்பன், M .கௌசல்யன், C . செல்வகுமார், P .M .ராஜேந்திரன், வெங்கடேசன், M . ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்