சேலம் நகர பகுதிகளில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில், கால தாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, House Keeping பகுதிகளில் வேலை செய்யும் தோழர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பள பாக்கி. நிர்வாகத்துடனும், ஒப்பந்தத்தாரருடனும் பேசி முன்னேற்றம் இல்லை. இனியும் பொறுத்து பயன் இல்லை என்ற நிலையில், BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்கள் இணைந்து, மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்திற்கு, அறைகூவல் கொடுத்தோம்.
அதன் படி, 15.03.2017 மதியம் சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன் தலைமை தாங்கினார். TNTCWU மாநில நிர்வாகி தோழர் செல்வம் துவக்கவுரை வழங்கினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S . ஹரிஹரன், P . தங்கராஜ், கண்டன உரை வழங்கியபின், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன பேருரை வழங்கினார். இறுதியாக, TNTCWU மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட போராட்டத்தில், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . பன்னீர் செல்வம், P .M . ராஜேந்திரன், P . செல்வம், P . புகழேந்தி, கிளை செயலர்கள் தோழர்கள் N . பாலகுமார், C . காளியப்பன், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னர், துணை பொது மேலாளர் (நிர்வாகம்) அவர்களை சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்தினோம். நம்மை வைத்து கொண்டு ஒப்பந்ததாரரிடம் DGM பேசினார். இன்று, 16.03.2017 அனைவருக்கும் முழுமையாக சம்பளத்தை பட்டுவாடா செய்வதாக ஒப்பந்ததாரர் உறுதி அளித்துள்ளார். மீண்டும் கால தாமதம் ஏற்பட்டால், போராட்டம் திவிரமடையும் என தெரிவித்து நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்