(மார்ச் 23 - பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள்)
கடந்த மாதம் மத்தியப் பிரதேசம், இந்தூரில்ஒரு துப்பாக்கி காட்சிக்கு முதல் முறையாக வைக்கப்பட்டது.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமான சாண்டர்சனை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அது. சிறைச்சாலையின் கிடங்கில் எதேச்சையாக தூசிதட்டி பார்த்தபோது இந்த துப்பாக்கி தான்பகத்சிங் உபயோகித்த துப்பாக்கி என்று அறிந்துஅது உடனடியாக மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பயன்படுத்திய துப்பாக்கி இது. ஆனால் "ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பையோ அல்லதுஅரசியல் நிறுவனத்தையோ, அவற்றை உயர்த்திப்பிடிக்கும் தனிநபர்களை படுகொலை செய்வதால் எந்த காலத்திலும் தூக்கி எறிந்து விட முடியாது" என்பதை பகத்சிங்கும் அவர்தம்தோழர்களும் தங்களது புரட்சிகர செயல்பாட்டில் கிடைத்த அனுபவம் மற்றும் புரட்சிகர தத்துவ நூல்கள் மூலம் உணர்ந்தனர்.
காந்தி- இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் சமயத்தில் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. காந்தியாரிடம் தூக்குத் தண்டனையை நிறுத்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட வேண்டும் என்று பலர் கோரினர். ஆனால் காந்தி பயங்கரவாதத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் அதை நிராகரித்து, தூக்குத் தண்டனை குறித்து அமைதி காத்தார். மதபயங்கரவாதம் காந்தி குறிப்பிட்ட இந்த "பயங்கரவாதம்" பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தே போராடியது. ஆனால் காந்தி போற்றிப் புகழ்ந்த கீதையை பின்பற்றுவதாகச் சொன்ன கோட்சேயின் மத பயங்கரவாத துப்பாக்கி தான் இறுதியில், வெள்ளையனை எதிர்த்து போராடிய காந்தியை கொன்றது. வெகுமக்களை விடுதலை போராட்டத்தில்பங்கேற்க செய்ததில் காந்தியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல் மத சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மையை வலியுறுத்தியவர் காந்தி. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது கலவரம்ஏற்பட்ட பகுதிக்கு (நவகாளி) நேரில்சென்றவர்அவர். பாகிஸ்தானுக்கு சாதகமாக காந்தி நடந்து கொள்கிறார் என்ற வாதமே அவரை இந்து மத அடிப்படைவாதிகள் கொல்வதற்கான காரணமாகும். " பாகிஸ்தானின் உருவாக்கத்தில் முடிவடைந்த பயங்கர நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பானவரும், பதில் சொல்லவேண்டியவரும் காந்திஜிதான்". "உண்ணாவிரதத்தை அவர் (காந்தி) கைவிட விதித்த நிபந்தனை ஒவ்வொன்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு எதிராகவும் இருந்தது" இது தான் நாதுராம் கோட்சேயின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும்.இன்று காந்தி மீண்டும் மீண்டும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, சிறுபான்மை மக்கள், தலித்துகள் இன்று குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். காந்தியை கொன்ற மதவாதிகளை எதிர்கொள்ள, காந்தியாரால் வன்முறையாளர்கள் என்று சொல்லப்பட்ட பகத்சிங்கின் சிந்தனைகளே இன்று அதிகம் தேவை.மதச்சார்பின்மை லாலா லஜபதி ராயை தனது மானசீக தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தவர் பகத்சிங், ஆனால் லஜபதிராய் மத அடிப்படைவாத சக்திகளோடு இணைந்து பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதை அவர் விமர்சித்தார். பகத்சிங் உள்ளிட்டவர்கள் உருவாக்கிய "நவஜவான் பாரத் சபா" வின் ஆறு அமைப்பு விதிகளில், கீழ்க்கண்ட இரண்டு விதிகள் மதச்சார்பின்னை குறித்ததாகும்.ர மதவாத அமைப்புகளுடனோ அல்லதுமதவாத கருத்துக்களை பரப்பும் அமைப்புகளுடனோ எவ்வித தொடர்பும் நவஜவான் பாரத் சபா ஏற்படுத்திக் கொள்ளாது.ர மதம் என்பது மனிதனின் தனிப்பட்ட நம்பிக்கை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் மக்களிடையே சகிப்புத்தன்மையை உருவாக்குவது. மதம், சார்ந்த பற்றாளர்களாகவே துவக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்த தீவிர செயல்பாட்டாளர்கள் இருந்தனர். இதுகாலப்போக்கில், அனுபவம், வாசிப்பு மற்றும்பரந்த உலக ஞானம் ஆகிவற்றாலே தான்முதிர்ச்சி பெற்றது. இந்த புரட்சிகர தத்துவவளர்ச்சி பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் காலத்தில் தான் ஒரு இறுதி வடிவம் பெற்றது என்று சொல்லலாம்.புரட்சிகர சிந்தனைப் போக்கின் வளர்ச்சி 1894 இல் பூனாவில் துவக்கப்பட்ட முதல் தீவிர செயல்பாட்டாளர்களின் அமைப்பின் பெயர்" இந்து மதத்திற்கு தடையாக உள்ளவர்களை நீக்குவதற்கான சங்கம் ( ளுடிஉநைவல கடிச வாந சநஅடிஎயட டிக டிளெவயஉடநள வடி வாந ழiனேர சுநடபைiடிn). சிவாஜிஸ்லோகம், கணபதி ஸ்லோகம் சொல்லிக்கொண்டு நமது பசுக்களை அவர்கள் (பிரிட்டிஷார்) கொல்கிறார்களே இதையே எதிர்க்க வேண்டாமா என்ற தொனியில் தான் இயக்கங்கள் கட்டப்பட்டன. மக்களை வதைத்த ராண்ட்மற்றும் அவர்ஸ்ட் ஆகிய வெள்ளை அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சபேகார் சகோதரர்கள் இந்த இயக்கத்தில் தான் இருந்தனர்.இதைத் தொடர்ந்து உருவான அமைப்புகள் ஒவ்வொன்றும் தத்துவரீதியாக முற்போக்குப் பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவந்தன. 1913 ல் துவக்கப்பட்ட கதார் கட்சி"மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்து, முஸ்லிம், சீக்கியர் ஒற்றுமைக்காக உறுதிபட நிற்கிறது. அதே போல் தீண்டப் படுவோர், தீண்டத்தகாதோர் என்ற பிரிவினையையும் அது ஏற்கவில்லை" என்று பிரகடனப்படுத்தியது. இந்தியாவில் இருந்த புரட்சி இயக்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து " இந்துஸ்தான் குடியரசு சங்கம்" என்ற அமைப்பை சசீந்திரநாத் சன்யால் அமைத்தார். இதன் தொடர்ச்சியாகவே பகத்சிங்கின் பங்களிப்போடு இந்த இயக்கம் "இந்துஸ்தான் சோசியலிஸ்ட் குடியரசுசங்கம்" என 1928 ல் மாற்றம் கண்டது.
இதுவே தெளிவான தத்துவ பார்வையை புரட்சி இயக்கத்திற்கு கட்டமைத்து.தனிநபர் பழிவாங்கலால் சமூக அமைப்பைமாற்றமுடியாது, மக்கள் திரளை சேர்க்காமல், குறிப்பாக உழைக்கும் மக்களை, கிராமப்புற ஏழைகளை, ஒடுக்கப்படுபவர்களை அணிதிரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதைஇவர்கள் பிரகடனப்படுத்தினர். தங்கள் வாழ்க்கையின் சுகபோகங்கள் அனைத்தையும் தியாகம் செய்து, தன்னுடைய உயிரையும் கொடுக்கும் அளவிற்கு ஒரு உந்துசக்தி தீவிர செயல் பாட்டாளர்களுக்கு தேவைப்பட்டது. பகத்சிங்கிற்கு முன்பு வரை இருந்ததீவிர செயல்பட்டாளர்கள் இந்த உந்து சக்தியைகடவுள், மதம் என்பதின் மூலம் பெற்றார்கள். புரட்சியாளர்களுக்கு இருந்த தத்துவத் தெளிவால், இதுபோன்ற செயற்கையான ஆன்மீக ஊன்றுகோல் எதுவும் அவசியப்படவில்லை. "தன் சொந்தக் காலில் நிற்க முயற்சிக்கும்ஒருவன், யதார்த்தவாதியாக இருக்க வேண்டும்என்று நினைக்கும் ஒருவன், சந்தர்ப்பசூழல்கள்தன்மீது சுமத்தும் அத்தனை துன்பங்களையும், துயரங்களையும், மூடநம்பிக்கைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, நேரிடையாகவே எதிர்கொள்ள வேண்டும்" என்று சொன்னதோடல்லாமல் செய்தும் காட்டினார். கருத்துக்களை கொல்லமுடியாது " நான் ஏன் நாத்திகன்" என்று தனது புத்தகத்தில் "தான் உண்மையை நாடுபவன் என்று உரிமை பாராட்டிக்கொள்ளும் எந்த மனிதனும் பழைய நம்பிக்கை முழுவதையும் போட்டிக்கு அழைக்க வேண்டும். பழைய நம்பிக்கையால் ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாவிட்டால் நொறுங்கி தவிடுபொடியாகிவிடும்." என்கிறார் பகத்சிங். இதை சிரத்தையோடு செய்தவர்கள் தான் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் போன்றவர்கள். கருத்தை எதிர்கொள்ள முடியாத மதவாதக் கூட்டம் அவர்களை கொலைசெய்தது. பகத்சிங் தன்னை தூக்கிலிடுவது குறித்து சொல்லும்போது "என் சிந்தனைகள் பிரிட்டிஷாரை பேய் போல் வட்டமிடும். அவர்கள் இங்கிருந்து ஓடும்வரை அதுஅவர்களை விரட்டும்" என்றார். அதைத்தான்நாம் நினைவில் வைத்து தொடர்ந்து களமாடவேண்டியுள்ளது. தனி மனிதர்களைகொல்லலாம், கருத்துக்களைக் கொல்லமுடியாது. அந்தகருத்துக்கள் தான் இன்று நாடு முழுவதும் பலபல்கலைக்கழகங்களிலும், இளம் தலைமுறையினரிடமும் எழுச்சியுற்று வருகிறது. மதவாதிகளின் பழைய நம்பிக்கைகள், நவீன ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாமல் நொறுங்கி தவிடுபொடியாவதைக் கண்டு அஞ்சி நடுங்கி வன்முறையை ஏவுகின்றனர். "வீண் நம்பிக்கையும், குருட்டு நம்பிக்கையும் ஆபத்தை விளைவிக்கும். அது மூளையை மந்தப்படுத்தி, மனிதனை பிற்போக்காளனாக மாற்றிவிடுகிறது." இது போன்ற பிற்போக்கு, மந்த புத்தி ஆட்சிதான் இன்றைய இளம் தலைமுறையை சிந்திக்க விடாமல் முடக்க துணிகிறது. பொய்களை குத்திக் கிழித்து உண்மை முன்னேறியதுதானே வரலாறு.பகத்சிங்கின் வழியில் பொய்களை குத்திக் கிழித்து உண்மையை முன்னேற்ற நினைப்பவர்கள் ஏன் பகத்சிங்கை தொடரவேண்டும் என்பற்கான பதிலை தோழர் பி.டி.ரணதிவேயின் வார்த்தைகளில் சொல்வதானால், சாதி ஒழிப்புக்கு , மத வெறி ஒழிப்புக்கு ஆழமான முக்கியத்துவம் தந்தார் பகத்சிங். தான்ஒரு கடவுள் மறுப்பாளன் என்பதை பறைசாற்றிடதயங்கவில்லை.ர தனதுசிந்தனைகளை தொடர்ந்து செழுமையாக்கிக்கொண்டே இருந்தார்.
குறிப்பாக தனது கோட்பாடு அல்லது கருத்து தவறு எனில் அதனை தூக்கியெறிந்து சரியான கருத்தை தழுவிக்கொள்வதில் பகத்சிங் தயங்கியது கிடையாது.இத்தகைய தெளிவான கருத்துக்களை கொண்ட பகத்சிங்கின் சிந்தனை மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் அவர் வழி நின்று பிற்போக்கு மதவாத சக்திகளை உறுதியாக எதிர்ப்போம்.