Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, March 24, 2017

அமைப்பு தின சிறப்பு கூட்டம் - ஆத்தூர்



BSNLEU சங்கத்தின் 17வது அமைப்பு தின சிறப்பு கூட்டம், ஆத்தூரில், 22.03.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர்கள் தோழர் P . குமாரசாமி (ஆத்தூர் நகரம்) மற்றும் தோழர் B . பெரியசாமி (ஆத்தூர் ஊரகம்) கூட்டு தலைமை தாங்கினர். 

முதல் நிகழ்வாக, சங்க கொடியை மாவட்ட செயலர் தோழர் 
E . கோபால், ஏற்றி வைத்தார். தோழர் A . அருள்மணி, அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் G.R .வேல்விஜய் அனைவரையும் வரவேற்றார். 

தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் துவக்கவுரை வழங்கினார். மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P . செல்வம், GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், மூத்த தோழர் V. சின்னசாமி வாழ்த்துரை வழங்கினார்கள். 

இறுதியாக, தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார். மாவட்ட செயலர் தம் உரையில், BSNLEU இயக்க வரலாறு, நமது சாதனைகள், BSNL இன்றைய நிலை, சேவை மேம்பாடு, தள மட்ட பிரச்சனைகள் என பல விஷயங்களை விளக்கி பேசினார். 

தோழர் P . சங்கர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்