Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, March 8, 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

Image result for wage revision


செப்டம்பர் 2, 2016 பொது வேலை நிறுத்தத்தையொட்டி, மத்திய தொழிலாளர் அமைச்ச்சர், புதிய சம்பளம் பற்றிய உத்தேச அறிவிப்பை 01.09.2017 அன்று  வெளியிட்டார்.  பின்னர் 19.01.2017 அன்று அந்த அறிவிப்பு அரசிதழாக  (GAZETTE NOTIFICATION) வெளியிடப்பட்டது. இதை BSNL  நிர்வாகம் உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்று BSNLEU, TNTCWU, BSNLCCWF  மாநில, மத்திய சங்கங்கள்  வலியுறுத்தி வந்தன.  

14.03.2017  அன்று நடைபெறவிருக்கும் தேசீயக் குழுவில்  (NATIONAL COUNCIL) கூட்டத்திலும் ஒரு பிரச்சினையாக   நமது சங்கம் கொடுத்திருந்தது. தமிழ் மாநில நிர்வாகத்துடனும் இப்பிரச்சினை மீது விவாதம் நடத்தப்பட்டு வந்தத்து. BSNL  கார்ப்போரேட் அலுவலகத்துடன் தொடர்ந்து விளக்கம் கேட்டு வருவதாகவும் , உரிய வழிகாட்டுதல் வந்தவுடன் உத்தரவு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது. 


தற்போது கார்ப்போரேட் அலுவலகம் வழிகாட்டுதல் பெற்று மாநில நிர்வாகம் 07.03.2017 அன்று அனைத்து மாவட்டங்களுக்கும்  அரசிதழை அமுல்படுத்தும் படி கடிதம் அனுப்பி விட்டது.  அந்த உத்தரவின்படி  19.01. 2017 அன்று விலைவாசி புள்ளி 271 அடிப்படையில் ( 2001 = 100 ) C பகுதி இடங்களில் பணிபுரியும்  UNSKILLED  ஊழியருக்கு ரூபாய் 350 ரூபாய் ,  B பகுதி இடங்களில் பணிபுரியும்  UNSKILLED  ஊழியருக்கு ரூபாய் 437 ரூபாய்  என்ற அடிப்படைச் சம்பளமும்,  271 புள்ளிகளுக்கு மேல் உயரும் சராசரி ஒவ்வொரு புள்ளிக்கும் ரூபாய் 1.29 / 1.63  VARIABLE DEARNESS ALLOWANCE யும் வழங்கப்படும்.  தற்பொழுது 271 புள்ளிஅடிப்படையில் (01.10.2016 முதல்) ரூபாய் 250 / 312  பெற்று வருகிறோம்.  


புதிய உத்தரவின் மூலமாக ஒவ்வொரு ஊழியருடைய சம்பளத்திலும்  100 / 125 உயர்வு கிடைக்கும். மாதச் சம்பளத்தில் ரூபாய் 2600 /  3250  உயர்வு கிடைக்கும். கணிசமான ஊதிய உயர்வு கிடைக்கிறது. அரசிதழ் வெளியிடப்பட்ட 19.01.2017 முதல் புதிய சம்பளம் அமுல் படுத்தபடும். அன்று முதல் சம்பள  நிலுவையும்   கிடைக்கும்.


இது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால் நமது கோரிக்கையான ரூபாய் 18000 என்பதை ஒப்பிடும் பொழுது நாம் செல்ல வேண்டிய தூரம் மிகத் தொலைவில் உள்ளது என்பதையும் , அதற்காக தொடர்ச்சியான தீவிரமான போராட்டத்தில் நாம் ஈடுபட வேண்டும். நமது போராட்டப் பயணம் தொடரும்.


UNSKILLED LABOUR 19.01.2017 முதல்


A பிரிவு நகரம் தினக்கூலி ரூ.523

B பிரிவு நகரம் தினக்கூலி ரூ.437
C பிரிவு நகரம் தினக்கூலி ரூ.350

வாழ்த்துக்களுடன்,

E . கோபால்,
மாவட்ட செயலர் 
CGM உத்தரவு காண இங்கே சொடுக்கவும் 
அரசிதழ் காண இங்கே சொடுக்கவும்