Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, March 31, 2017

சம்பள மாற்றம் சம்மந்தமாக - அனைத்து சங்க கோரிக்கைகள்



15.03.2017 அன்று நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில், BSNL ஊழியர்கள், அதிகாரிகள் சம்பள மாற்றம் சம்மந்தமாக, அரசாங்கத்திற்கு விவரமாக கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டது. அதாவது, நமது கோரிக்கைகள், அதற்கான வழி முறைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி, ஒரே குரலில், ஒன்றுபட்டு கோரிக்கை வைப்பது என்பது கூட்டத்தின் முடிவு. 

அதன்படி, 29.03.2017 அன்று DPE  மற்றும் DOT செயலர்களுக்கு , அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, 1.1.2017 முதல் ஊதிய மாற்றம் செய்திட, நியாயமான காரணங்களை முன்னிறுத்தி ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், BSNLEU, NFTEBSNL, SNEA, AIBSNLEA, BSNLMS, BSNLOA, BSNLBEA, BSNLBTU தலைவர்கள் கூட்டாக கையொப்பமிட்டு உள்ளனர்.

கடிதத்தின், முக்கிய சாராம்சங்கள்:

1. 3வது ஊதியக்குழுவில் BSNL நிறுவனத்திற்கு  செலவினம் மற்றும் இலாபம் (Affordability/Profitability) என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு வழங்க வேண்டும். 

2. 01.01.2012 முதல், 15 சத ஊதிய உயர்வு கருத்தியலாக வழங்கி, 01.01.2017 முதல் கூடுதல் 10 சத ஊதிய உயர்வுடன் சம்பளம் மாற்றம் செய்ய வேண்டும். 

3. BSNL ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்திட வேண்டும்.

4. சம்பள விகிதத்தின் அதிகபட்ச சம்பளத்திற்கு பதில், வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்,  ஓய்வூதியப் பங்களிப்பு இருக்க வேண்டும். (சம்பள தேக்க நிலையை போக்க, சம்பள விகித இடை நீளம் [span of pay scales] அதிகமாக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது)

5. சம்பள முரண்பாடுகளை  தவிர்க்க, ஆண்டுயுயர்வு தொகை (INCREMENT ) தற்பொழுது  வழங்கும்  முறைக்கு பதில் , 7 வது ஊதிய குழு பரிந்துரைத்த அனைவருக்கும் சீராக, ஜனவரி 1 அல்லது ஜூலை 1 தேதிகளில் வழங்கி, ஒழுங்குபடுத்தப்பட்ட ஆண்டு ஊதிய உயர்வாக இருக்க வேண்டும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
மத்திய சங்கங்கள் கூட்டு கடிதம் காண இங்கே சொடுக்கவும்